Thursday, January 01, 2009

நாயகனாய் நின்ற நந்தகோபன் - TPV16

இது திருப்பாவையின் 16-வது பாசுரம்.

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய*
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண-
வாயில் காப்பானே.* மணிக் கதவம் தாள் திறவாய்*
ஆயர் சிறுமியரோமுக்கு* அறை பறை-
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்*
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா.* நீ-
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்


பொருளுரை:
Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting
நமக்குத் தலைவனாய், அரணாய், அரசனாய் இருக்கும் நந்தகோபன் எழுந்தருளியுள்ள கோயிலுக்குக் காவலானாய் நிற்பவனே ! மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரண வாயிலைக் காத்து நிற்பவனே ! ஆயர்பாடியில் வாழும் கோபியருக்கு வேண்டி, மாணிக்க மணிகள் பதிக்கப்பட்ட வாயிற்கதவைத் திறந்திடுக !

Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting
உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடையவனும், அதிசயமான காரியங்களை நிகழ்த்துகின்ற மாயனும், நீலத் திருமேனி கொண்ட மணிவண்ணனும் ஆன எம்பெருமான், நோம்புக்கான பறையை அருளுவதாக எங்களுக்கு நேற்றே வாக்களித்துள்ளான் ! அக்கண்ணபிரானை துயிலெழுப்ப நாங்கள் தூய உடலோடும் உள்ளத்தோடும் வந்திருக்கிறோம்.

ஆகவே, முதற் காரியமாக, சச்சரவு செய்யாமல், மறுப்பு தெரிவிக்காமல், காவலனான நீ, பிரம்மாண்டமான வாயிற்கதவைத் திறந்து, நாங்கள் நோன்பிருந்து கண்ணனை வணங்கி வழிபட அனுமதி தர வேண்டும்.


பாசுர விசேஷம்:

1. பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுவதாகப் பெரியோர் கூறுவர்.

2. பிரமாணம்: வேதம், ஸ்மிருதி, புராண இதிகாசங்கள், திவ்யபிரபந்தம், பிரம்ம சூத்ரம் ஆகியவை
பிரமேயம்: பரமபதத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி
பிரமாதா: ஆச்சார்யர்கள்
சுருங்கச் சொன்னால், பிரமாணம் மூன்று மந்திரங்களையும், பிரமேயம் எம்பெருமானையும், பிரமாதா, மந்திரங்களை உபதேசிக்கும் ஆச்சார்யனையும் குறிக்கின்றன. எம்பெருமானைப் பற்ற மந்திரம், பரதேவதா, ஆச்சார்யன் ஆகிய மூன்றின் பேரிலும் பரிபூர்ண நம்பிக்கை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

3. இப்பாசுரத்தில்
கோயில் காப்பான் - மூல மந்திரம்
கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் - த்வயம்
நென்னலே வாய் நேர்ந்தான் - சரம ஸ்லோகம்

4. 'மணிக்கதவம் தாள் திறவாய்' என்பது மேற்கூறிய மூன்று மந்திரங்களை உபதேசிக்குமாறு ஒரு சிஷ்யன் ஆச்சார்யனை வேண்டுவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.

5. இப்பாசுரத்தில் கோபியர்கள் 'தூயோமாய் வந்தோம்' என்று சொல்லும்போது, முக்காரண சுத்தியுடன் (வாக்கு, மனம், உடம்பு) பகவானிடம் வந்துள்ள அடியார்களாக தங்களை அறிவித்துக் கொள்கின்றனர்.

6. 'துயிலெழப் பாடுவான்' என்பது, எம்பெருமானை போற்றிப் பாடித் தொழுது, அதன் வாயிலாக உலக பந்தங்களிலிருந்து விடுபடும் மார்க்கத்தை உட்பொருளாக வலியுறுத்துகிறது !

7. சிஷ்யனானவன், ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத் தயாராகும் கணத்திலேயே, எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை ' மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்' என்பது குறிக்கிறது.

8. 'நேய நிலைக் கதவம்', தடங்கலின்றி வளரும் (பகவான் மேல் வைத்திருக்கும்) அன்பையும், பக்தியையும் குறிக்கிறது.


என்றென்றும் அன்புடன்
பாலா

*** 274 ***

13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will be the first comment :)

ச.சங்கர் said...

சிறப்பு பெற்ற பாசுரங்களாய் எடுத்து இட்டமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
நன்றி !

said...

nalla pathivu ...

enRenRum-anbudan.BALA said...

thanks, shravan !

enRenRum-anbudan.BALA said...

Test !

உயிரோடை said...

நல்ல விளக்கங்கள். ஆனால் பதிவு சிறியதாகிவிட்டது. :) but sweet.

//'நேய நிலைக் கதவம்', தடங்கலின்றி வளரும் (பகவான் மேல் வைத்திருக்கும்) அன்பையும், பக்தியையும் குறிக்கிறது.//

மிகக் கவர்ந்தது.

said...

கீழ்க்காண்பது நான் தொண்டி இராகவன் என்பவரின் வலைபதிவில் இட்ட பின்னூட்டம்:

நன்றி.

எனினும் சில கேள்விகள். தெரிந்தால், சொல்லலாம்.

திருப்பாவை, ஒரு பெண்ணால் எழுதப்பட்டது. அல்லது, அருளப்பட்டது.

அந்த பக்தியின் வழி ஆணின் வழியோடு ஒத்து வராது.

தன்னை ஒரு நாயகியாகவும், கடவுளை தன் காதலனாக, அல்லது, மணக்கவிரும்பும் மணாளாக உருவகித்து வழிபட்ட பக்தியாகும்.

இதைப்பற்றி, பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஒரே ஆண்கள் கூட்டமல்லவா, இதைப்பற்றிச் சிலாகித்து எழுதிவருகிறார்கள் வலைப்பதிவர்களில் கூட.

அப்படியே, ஒரிருவர் பெண்களுள் இருப்பினும், அவர்தம் கருத்தென்ன?
இப்படிப்பட்ட சிருங்கார ப்க்தியினைப்பற்றி.

இது, சாத்தியமா? பாமரப்பெண்ணொருத்தி, தன்னை மணப்பெண்ணாகவும், கடவுளை மணாளனாகவும், உருகி, பக்திப்பரவசம் படலாமா? அதை இச்சமூகம் ஏற்றுக்கொள்கிறதா? அவள் கணவன் என்ன நினைப்பான்? அவளை விட்டுப் பிரிந்து விடுவான் அல்லவா? கிரஹ்ஸ்தரான் அப்பெண்ணுக்கு இப்படிப்பட்ட பக்தி சரிவருமா? அவள் துறவரம் ஏற்றாலன்றோ இப்பக்தி சாத்தியமாகும்.

இங்கே, மீராபாயின் வாழ்க்கையை நினைவு கூறலாம். இதே மணப்பெண்-மணாளன் பக்தி. இதே கண்ணனே அங்கும். அவள் ச்மூகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதனோடு அவளால் நிலவுலக வாழ்க்கை வாழ முடியவில்லை. துறவறத்தால்தான் கண்ணன்மேல் பக்தியைத் தொடர முடிந்தது.

இன்னிலைதான் மற்றவருக்கும் வரும்?

Dondu Ragavan, you may try. I will be posing the same queries in the blogs of your favourite bloggers also.

Unknown said...

திருப்பாவையின் பாசுரங்களின் பொருளுரை மற்றும் பாசுர விசேஷம்
அனைவரும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த டோண்டு ராகவன் ஐயாவுக்கு நன்றி.


பக்தி மணம் பரப்பும் பாலா ஐயாவுக்கு
வணக்கம்.சுவாமி.

said...

I have read your response there. and posted further queries there, underneath your response. I dont want to repeat it here since it appears it is not appropriate.

Please go there; and, if you can, enlighten the readers of Dondu blog.

With new greetings for the new year.

enRenRum-anbudan.BALA said...

மின்னல், நெல்லை சுவாமி,
நன்றி.

அனானி 1,

வருகைக்கு நன்றி. உங்கள் கேள்விக்கு பதில் தெரியவில்லை!

அனானி 2,
டோண்டு அவர்கள் பதிவில் அதற்கு பதில் கூறி விட்டேன். பார்க்கவும்.

குமரன் (Kumaran) said...

பாலா,

கோவில் காப்பான் என்றது திருமந்திரத்தையும் தோரண வாயில் காப்பான் என்றது துவயத்தையும் என்பதை இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன். ஏன் அவ்வாறு என்று சட்டென்று புரியவிலை. நென்னலே வாய் நேர்ந்தான் என்றது சரம ஸ்லோகத்தை என்பது புரிகிறது.

enRenRum-anbudan.BALA said...

ஜூனியர்,
//கோவில் காப்பான் என்றது திருமந்திரத்தையும் தோரண வாயில் காப்பான் என்றது துவயத்தையும் என்பதை இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன். ஏன் அவ்வாறு என்று சட்டென்று புரியவிலை. நென்னலே வாய் நேர்ந்தான் என்றது சரம ஸ்லோகத்தை என்பது புரிகிறது.
//

கோயில் காப்பான் என்பவன் வெளிவாசலைக் காப்பவன், தோரணவாயில் காப்பான் உள்வாசலைக் காப்பவன் (பரமனுக்கு அருகில் உள்ள கதவு!). வெளிவாசல் திறக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும் அல்லவா? அதனால், திருமந்திரமே பிரதானம்.

அடுத்த நிலை தான் த்வயம் -- பரமனைப் பற்ற ஸ்ரீயின் புருஷகாரமும் தேவை!

இன்னொரு விதத்தில், திருமந்திரமானது, தகுதியில்லாதவர்களிடம் சேராதபடி காக்கப்பட வேண்டும் என்பதை "கோயில் காப்பான்" உணர்த்துகிறது என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.

எனக்குப் புரிந்தது இவ்வளவு தான் :)

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails